×

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு விலை 28.8% வீழ்ச்சி அடைந்து விற்பனை..!!

மும்பை: ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு விலை 28.8% வீழ்ச்சி அடைந்து விற்பனையாகி வருகிறது. சோனி மற்றும் ஜீ இடையிலான இணைப்புத் திட்ட ஒப்பந்தத்தை சோனி நிறுவனம் முறித்துக் கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்றைய வர்த்தகத்தில் ஜீ பங்கு 10 சதவீதம் சரிந்துள்ளது. ஜீ நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று BSE இண்ட்ரா டே வர்த்தகத்தில் அதிகபட்ச சரிவான 30 சதவீதம் சரிந்து அதன் 52 வார குறைந்த விலையாக 162 ரூபாயை எட்டியுள்ளது.

சனிக்கிழமை வர்த்தக நேரம் முடிவில் ரூ.231.75 ஆக இருந்த ஜீ பங்கு விலை இன்று ரூ.66 குறைந்து ரூ.165.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஜீ நிறுவனத்திற்கு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இத்தகைய ஜீ என்டர்டெயின்மென்ட் இணைப்புத் திட்டம் கைவிடப்பட்டதற்கு ஜீ நிறுவனம் நிபந்தனைகளை மீறியதே காரணம் என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒப்பந்த முறிவுக்கு காரணமான ஜீ நிறுவனம் ரூ.748 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் சோனி நிறுவனம் கூறியுள்ளது.

The post ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு விலை 28.8% வீழ்ச்சி அடைந்து விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Zee Entertainment Enterprises ,Mumbai ,Sony ,Zee ,Gee ,GE Entertainment Enterprises ,Dinakaran ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...